சாஸ்திரம் கூறும் எச்சரிக்கைகள்!!

ஜோதிடம் அறிவோம்..!

சாஸ்திரம் கூறும் எச்சரிக்கைகள்!!

ஆயுளை வளர்க்கும் ஐந்து

◆ மாலைவெயில், ஓமப்புகை, இளம் மனைவி, அருவிநீர், இரவில்பால் அன்னம் சாப்பிடுதல் ஆகிய இந்த ஐந்தும் நமது ஆயுளை வளர்க்கும் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன

◆ குளிக்கும்போம் நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும்.

◆ தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது.

◆ நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது.

◆ கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது.

◆ சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது

◆ எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது

◆ சாப்பிட்டு முடித்ததும் தட்டையோ,கையையோ நக்கக்கூடாது

◆ இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிடவேண்டும்.

◆ வாய்கொப்புளித்தோ, எச்சிலையோ வலதுப்பக்கம் துப்பக்கூடாது.

◆ அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது.

◆ தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப் பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது

◆ ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடாயிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது

◆ கடும்வெயில், மயானப்புகை, தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணோடு உறவுகொள்ளுதல் தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்

◆ இருகைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

◆ இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

◆ அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, பொங்கல், பிறப்பு இறப்புகளால் ஏற்படும் தீட்டுக் காலங்கள் ஆகியவற்றின் போது வெந்நீரில் குளிக்கக்கூடாது.


Comments

Popular posts from this blog

இந்த வார சிறப்புகள் 07.02.2022 முதல் 13.02.2022 வரை

2022 ஆண்டுக்கான இந்து பண்டிகைகளின் பட்டியல்..!