2022 ரிஷபம் ராசி பலன்கள்

ராசி பலன்கள்- 2022

(Rasi Palangal 2022)

2022 ரிஷபம் ராசி பலன்கள் 

2022 Rishabha Rasi Palangal

ரிஷப ராசி அன்பர்களே இந்த ஆண்டு புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி நடக்கும். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப்படுவர். தாயாரின் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். பொதுவாக எவ்வளவு தான் சங்கடங்கள் ஏற்படுமானாலும் உங்கள் அந்தஸ்துக்கும் குந்தகம் ஏற்படாது. எந்தச்சங்கடங்களையும் சமாளிக்கும் ஆற்றலுக்கும் பஞ்சமிராது. பணக்கஷ்டம் உருவாக இடமில்லை. ஆனால், சிலர் விஷயத்தில் மனக்கஷ்டம் உருவாக இடமுண்டு. எனவே கவனமுடன் பேசுவது அவசியம். திடீர்ப் பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. தெய்வபலம் சிறப்பாக இருப்பதால் எல்லாமே சீராக அமைய வாய்ப்புண்டு. பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கவும் இடமுண்டு. வேலை இல்லாதோருக்கு அதற்கான வேளை கனிந்துவரும். திடீர்ப் பொருள் வரவுக்கும் வாய்ப்புண்டு. அதே போல் திடீர்ச் செலவுக்கும் இடமுண்டு.


குடும்பம்:

குடும்பத்தைப் பொறுத்தவரை நல்ல பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த ஒரு குடும்பமாக இருப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சகோதர, சகோதரிகள் உடனான மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமையுடன் இருக்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்துடன் அவ்வபோது குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் அதிக கவனம் தேவை. உங்களிடம் துடுக்குத்தனமாக செயல்படும் நண்பர்களிடமிருந்து பிரிவு ஏற்படலாம் என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது


பொருளாதாரம்:

பொருளாதார ரீதியான பிரச்சனைகள் அந்த அளவிற்கு உங்களுக்கு இருக்கப் போவதில்லை. பணம் பல வழிகளில் இருந்தும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொருளாதாரத்தை ஏற்றத்தில் கொண்டு செல்ல உங்களுடைய கடின உழைப்பையும் நீங்கள் கொடுப்பீர்கள். புதிய புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி தானாகவே வந்து சேரும் என்பதால் கவலை கொள்ள தேவை இல்லை. ஒன்பதாம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது ஆடை, ஆபரணங்கள், வீடு, வாகனம் போன்ற யோகம் கிடைக்கும்.


தொழில்:

தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்கள் எதிர்பாராத அனுகூலமான பலன்களை எல்லாம் பெற இருக்கிறீர்கள். தொழில் ஸ்தானத்தில் இவ்வாண்டு குரு பகவான் அதிக காலம் ஆட்சி புரிய இருப்பதால் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு லாபம் பெறலாம். ஆண்டின் துவக்கத்தில் சனி பகவான் 4வது இடத்தில் சஞ்சாரம் செய்வதால் இட மாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன் ஏற்படலாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ப வேலை கிடைத்து செட்டிலாகி விடுவீர்கள். புதிய தொழிலில் துறை சார்ந்தவர்களை கலந்தாலோசிப்பது உத்தமம்.


ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தவறான உணவு பழக்கங்களை இப்போது இருந்தே குறைத்துக் கொள்வது நல்லது. சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தால் உடல் நலம் சீராக இருக்கும். சுத்தம், சுகாதாரம் பேணுவதில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள். போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகாமல் இருப்பது நல்லது. உடல் எடையை குறைத்துக் கொள்ள முனைப்பு காட்டுவீர்கள். மன உளைச்சலில் இருந்து விடுபட யோக செய்ய முயற்சிப்பது நல்லது.


காதல்:

கணவன்-மனைவி இடையே மேலும் நெருக்கம் அதிகரிக்கும். எலியும், பூனையுமாக இருந்த நீங்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். புதிதாக திருமண வாழ்க்கையில் இணையப் போகும் காதல் ஜோடிகள் சாதகமான பலன்களை பெறுவீர்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் உங்கள் திருமணத்தை நடத்திக் கொள்ள முயற்சிப்பது உத்தமம். சுக்கிர பகவான் துணை உங்களுக்கு பரிபூரணமாக இருப்பதால் இல்லற வாழ்க்கையில் இன்பம் உண்டு.


பரிகாரம்:

2022 ஆம் ஆண்டில் குரு மற்றும் சனி பகவானின் ஆதிக்கம் அதிக அளவில் உங்கள் ராசிக்கு இருப்பதால் வியாழன் மற்றும் சனிக்கிழமை குரு, சனி வழிபாடு தொடர்ந்து செய்து வர சகல பாக்கியங்களும் உண்டாகும். சொத்துக்கள் சேர முருகனை தரிசியுங்கள். திடீர் அதிர்ஷ்டம் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்து வாருங்கள்.


Comments

Popular posts from this blog

இந்த வார சிறப்புகள் 07.02.2022 முதல் 13.02.2022 வரை

2022 ஆண்டுக்கான இந்து பண்டிகைகளின் பட்டியல்..!