2022 - கன்னி ராசி பலன்கள் ..!
2022 - ராசி பலன்கள்..!
2022 - கன்னி ராசி பலன்கள் ..!
(Kanni Rasi Palangal 2022)
கன்னி ராசி அன்பர்களே...!
இந்த ஆண்டு பலவிதமான சங்கடங்கள் வந்தாலும் மனோதிடத்துடன் அணுகி வெற்றி காண்பீர்கள். மனச்சங்கடங்களைச் சமாளித்து விடுவீர்கள். என்றாலும், பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். குடும்ப நலம், தாம்பத்திய வாழ்க்கை சீராக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் பல கஷ்டங்கள் பலமிழந்து போக வாய்ப்புண்டு. எனினும் சான்றோரை சந்தித்து வாருங்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவி உறவு கெட இடமில்லை. துன்பங்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய உத்தரவு கிடைக்க வாய்ப்புண்டு. உத்தரவைப் பெற பொறுமை காப்பது அவசியம். பொருளாதாரச் சங்கடம் உருவாகாது. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது.
குடும்பம்:
2022 ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்ற, இறக்கமான பலன்களை கொடுக்க போகிறது. அடிக்கடி குடும்பத்தில் குழப்பங்களும், பிரச்சனைகளும் தோன்றினாலும் விரைவில் அதற்கான தீர்வுகளும் கிடைத்து விடும் எனவே கவலை கொள்ளத் தேவையில்லை. ஆண்டின் மத்திம பகுதியில் இருந்து உங்களுக்கு தொடர் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதன் பிறகு நல்ல பலன்களை குடும்ப வாழ்க்கையில் காணலாம். குழந்தைகள் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. அவர்களின் எதிர்கால திட்டமிடல் புரிவது நல்லது. மேலும் மாணவர்கள் நேர்மையுடன், தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்து உழைத்தால் வெற்றி காணலாம்.
பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நல்லதொரு வளர்ச்சியைக் கொடுக்கும். தாய், தந்தையரின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். மேலும் நண்பர்கள் உதவிக்கரம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல வருமானம் இருக்கும் என்பதால் பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்ற நிலை அடையும் இருப்பினும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
தொழில்:
தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய சவால்களை எதிர்கொள்ள கூடிய நல்லதொரு பயிற்சி கொடுக்கும் ஆண்டாக அமைய இருக்கிறது. இதுவரை மந்தமாக இருந்து கொண்டு இருந்த நீங்கள் போட்டிகள் கண்டு உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேறு வேலையை தேடும் விஷயத்தில் சாதகப் பலனை காணலாம். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் கதவைத் தட்டும். வியாபார ரீதியான விஷயத்தில் சாதுரியமாக செயல்படுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தி காட்டுவீர்கள்.
ஆரோக்கியம்:
ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை சுத்தம், சுகாதாரம் பேணி காப்பது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் பயணிப்பது உத்தமம். மது, புகை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி கொண்டிருக்கும் சிலருக்கு அதிலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்புகள் அமையும். மேலும் உங்கள் ஆரோக்கியம் முன்னேற உடற்பயிற்சி மேற்கொள்வது, உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.
காதல்:
காதல் விவகாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் அதிர்ஷ்டம் தான். திருமண பந்தத்தில் இணைய இருக்கும் புதுமண ஜோடிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. யார் பெரியவர்? என்கிற போட்டிகளை தவிர்த்து விட்டுக் கொடுத்துச் செல்லுதல் உங்கள் மீதான மதிப்பை இன்னும் அதிகரிக்க செய்யும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரக் கூடிய அற்புதமான ஆண்டாக இவ்வாண்டு அமைய இருக்கிறது. இளம் காதல் ஜோடிகள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூடிய விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
பரிகாரம்:
2022 ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்ற, இறக்கமான பலன்களை கொடுக்க இருப்பதால் நவகிரக தோஷ வழிபாடுகளை மேற்கொள்வது நலம் தரும். குறிப்பாக சூரிய பகவானை வழிபட்டு வாருங்கள் நன்மைகள் பெறலாம். மேலும் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற, உங்களால் முடிந்த அளவிற்கு வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு அளியுங்கள்.
Comments
Post a Comment