மேஷம் ராசி பலன்கள் 2022 ..!

ராசி பலன்கள்- 2022

(Rasi Palangal 2022)

மேஷம் ராசி பலன்கள் 2022 ..!

Mesha Rasi Palangal 2022

துடிப்பும், வேகமும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே.. 

ஜோதிடம் (Astrology),

 இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உங்கள் திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். நீங்கள் செய்யும் வேலையில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி அதன்மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். உடல்நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முடிவுகள் தெளிவாக இருக்கும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சந்தான பாக்கியம் இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சாதகமான போக்கு காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு அதிக ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள்.

 குடும்பம்:

மேஷ ராசிக்காரர்கள் குடும்பத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகாரிக்கும். நான்காமிடத்தில் குரு, சனி சேர்க்கை குடும்ப சூழ்நிலையை அமைதியாக கொண்டு செல்லும். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் நீண்ட நாள் தடைப்பட்டு கொண்டிருந்த நல்ல விஷயங்களும், சுப செய்திகளும் கிடைக்கப் பெறுவீர்கள். இறை வழிபாடுகளில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் முக்கிய முடிவுகளை முன்கூட்டியே எடுத்துக் கொள்வது நல்லது.

பொருளாதாரம்:

பொருளாதார ரீதியான நெருக்கடிகள் அவ்வபோது ஏற்பட்டாலும் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிப்பது நல்லது. விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டிய ஆண்டாக இருக்கும். ஆண்டின் இறுதியில் ராகு உங்கள் வீட்டில் சஞ்சாரம் செய்ய போவதால் புதிய வாய்ப்புகளையும், வருமான ரீதியான முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.


தொழில்:

தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் அதிர்ஷ்ட பலன்கள் உண்டு. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதனை விரிவுபடுத்தும் எண்ணத்தில் வெற்றி காணலாம். சுய தொழில் எதிர்பார்க்கும் லாபத்தை கொடுக்கும் என்றாலும், அதிக விரயத்தையும் கொடுக்கும் என்பதால் திட்டமிட்டு சிக்கனத்துடன் இருப்பது நல்லது. வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆண்டின் நடுவில் பண ரீதியான இழப்புகள் ஏற்படும் என்பதால் விழிப்புணர்வு தேவை. சனி பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் வாகன ரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை.


ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் அடிக்கடி வீண் விரயங்கள் உண்டாகும். தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. உடலுக்கு ஒவ்வாத, ஆரோக்கியமில்லாத விஷயங்களை தவிர்த்து, ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சனையை ஆரம்பத்திலேயே தகுந்த மருத்துவரை பார்த்து அதனை சரி செய்து கொள்வது நல்லது. தியானம், யோகா போன்றவற்றை கடைபிடிப்பது மன உளைச்சலில் இருந்து உங்களை பாதுகாக்கும்.


காதல்:

கணவன், மனைவி இடையே அதீத கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆண்டின் தொடக்கத்தில் இந்த பிரச்சனைகள் இருந்தாலும் படிப்படியாக மறையும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. அமைதியான சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி புரிந்து கொள்ள முயற்சி செய்வது உத்தமம். குழந்தை வரம் வேண்டுபவர்ககளுக்கு நிச்சயம் இந்த வருடம் சுப பலன்களைக் கொடுக்கும்.


பரிகாரம்:

2022-ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்கள் குரு வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். வியாழன் கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்திக்கு குடும்ப பெயரில் அர்ச்சனை செய்து வாருங்கள். சுபகாரியத் தடைகள் விலக நல்ல காரியங்களுக்கு செல்லும் பொழுது நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு செல்லுங்கள். குடும்ப ஒற்றுமைக்கு தந்தையில்லா குழந்தைகளுக்கு கல்வி உதவி புரியுங்கள்.


Comments

Popular posts from this blog

இந்த வார சிறப்புகள் 07.02.2022 முதல் 13.02.2022 வரை

2022 ஆண்டுக்கான இந்து பண்டிகைகளின் பட்டியல்..!